பூம்பூம் மாட்டுக்காரர்களை காக்க வேண்டும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரை தான் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் அதிகரித்து விட்டதாக கவலை தெரிவித்துள்ள அவர் பூம்பூம் மாட்டுக்காரர்கள் காப்பது நம்முடைய கடமை என அறிவுறுத்தியுள்ளார். கீழடி நாகரிகம் போல பூம்பூம் ஆட்டக்காரர்களை நினைத்து நாம் பெருமை படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.