வெளியானது 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் சுமார் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மார்ச் 5-ம் தேதி முதல் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் எழுதினர்.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 10ஆம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் இன்று (மே 16, 2025) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தமிழ்நாடு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு (SSLC) அல்லது 10ஆம் வகுப்பு தேர்வு 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற்றது.
16.05.2025 ஆன இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 8,71,239 மாணவர்கள் மொத்தம் தேர்வு எழுதினர். அதில் 4,35,119 மாணவியர்களும் 4,36,120 மாணவர்களும் தேர்வு எழுதினர். 15,652 தேர்வுக்கு வரவில்லை. 10 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 8,17,261 (93.80%) தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவியர் 4,17,183 (95.88%) மாணவர்கள்: 4,00,078 (91.74%) ஆகும். மாணவர்களை விட 4.14% அதிகமான மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு SSLC தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாக அதிக தேர்ச்சி சதவீதத்தைக் காட்டுகின்றன. இதில் மாணவர்களை விட மாணவியர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




