--- --:--:-- --

10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்..!

2

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் சுமார் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மார்ச் 5-ம் தேதி முதல் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் எழுதினர்.

 

இந்த நிலையில், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் 10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் மாணவர்கள் அளித்த தொலைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிட்டாலும், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் மதியம் 2 மணிக்குத்தான் இணையத்தில் பார்க்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் இரண்டு தேர்வின் முழு விவரங்களையும் வெளியிட்டால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம் – 95.88% மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் – 91.74% தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon