--- --:--:-- --

இந்தியாவை சீண்டினால் பேரழிவு நிச்சயம்: பிரதமர் மோடி எச்சரிக்கை

5

இது புதிய இந்தியா. பதில் தாக்குதலின்போது முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.பாக். வேண்டுகோளுக்கு இணங்க ராணுவ நடவடிக்கைகள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது, இது புதிய இந்தியா, எதிரிக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்போம். புதிய இந்தியா அமைதியை விரும்புகிறது.

 

மனித குலத்தை பாகிஸ்தான் தாக்கினால் அவர்களை அழிப்போம். ஆபரேஷன் சிந்தூர் பொதுவான ராணுவ நடவடிக்கை மட்டும் அல்ல. பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவை சீண்டினால் பேரழிவு நிச்சயம். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அச்சத்தில் உள்ளனர். நாம் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும்போது திக்கெட்டும் பாரத் மாதா கி ஜெய் ஒலிக்கிறது.

 

பயங்கரவாதிகளின் இல்லத்திற்குள்ளேயே நுழைந்து தாக்கினோம். நமது ஏவுகணைகளை நினைத்து பாகிஸ்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டது. பாக். பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதுதான் நமது லட்சியமாக இருந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon