--- --:--:-- --

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு; மே 14-ல் ஹால்டிக்கெட்

4

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், ஹால்டிக்கெட்டை புதன்கிழமை (மே 14) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; தொடக்கக்கல்வி பட்டய தேர்வு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் நடத்தப்படுகிறது. அந்தவகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரையும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 3 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

 

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கலில் விண்ணப்பித்தவர்கள் உட்பட) தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 14 ஆம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon