காஷ்மீரில் 10ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளதால் வரும் பத்தாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனை அடுத்து அந்த மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு ராணுவம் தடை விதித்தது. இந்நிலையில் காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக்கொள்ள படுவதாகவும் வரும் 10ஆம் தேதி முதல் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




