கச்சத்தீவு கைவிட்டுப் போக காரணமே திமுகதான்: விஜய்
கச்சத்தீவு மீண்டும் நமக்கு சொந்தமாவது மட்டும்தான் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே பரிகாரம், தீர்வு என விஜய் தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஆட்சி அதிகார பசியால் கச்சத்தீவு கைவிட்டு போனதாக குற்றம் சாட்டிய அவர், நிரந்தர தீர்வு எட்டும்வரை 99 வருட குத்தகையாக கச்சத்தீவை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை செல்லும் PM மோடி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




