--- --:--:-- --

செங்கோட்டையனுக்காக பேரவையில் ஈபிஎஸ் வைத்த கோரிக்கை!

1

திமுக எல்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் புறக்கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார்.

 

இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனிடையே, சட்டமன்ற வளாகத்தில் நேற்று நடந்த அதிமுக எல்.எல்.ஏக்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

 

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், தங்களை யாரும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு நுழைவு வாயில் எண் 2 வழியாக வந்த செங்கோட்டையன், இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

 

நான்கு நாட்கள் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தாலும், சட்டசபையின் 4-வது நாள் அமர்வில் பங்கேற்றார்.இதையடுத்து இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக செல்லு ராஜு பேசியதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சில விளக்கங்களை கொடுத்தார்.

 

இந்த நிலையில் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் சபாநாயகரிடம் முறையிட்டார். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.

Right Menu Icon