--- --:--:-- --

ஊரக தூய்மை அடிப்படையில் தமிழகத்திற்கு விருது வழங்கினார் பிரதமர் மோடி

Capture

ஊரக தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பெற்றுக்கொண்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது .

 

தமிழகத்தில் உள்ள 31 ஊரக மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு நடைபெற்றது. குறிப்பாக பள்ளிகள், அங்கன்வாடிகள் போன்றவற்றில் நேரடி கள ஆய்வு கிராமப்புற மக்களின் தூய்மை குறித்து கேட்டறிதல் தூய்மையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் கிடைக்க பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon