பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை..!
தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4ஆம் தேதி) அனைத்துப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல்மலையனூர் கோவிலின் தேரோட்டம் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று ஒருநாள் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் இன்று (மார்ச் 4) தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்ட சாமியின் 193வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி வேலை
நாளாகவும் அறிவித்து தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மார்ச்.4ம் தேதி) அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா நடக்கிறது. இதனையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





