தண்டவாளத்தில் சிக்கிய டிராக்டர்.. தூக்கி வீசிய அதிர்ச்சி..!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்று தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட டிராக்டர் மீது ரயில் மோதி விபத்திற்கு உள்ளானது.
தண்டவாளத்தில் சக்கரம் சிக்கிக்கொண்ட நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் வந்ததால் டிராக்டரை விட்டு விட்டு ஓட்டுனருக்கு கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினார்.
ரயில் மோதிய வேகத்தில் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த டிப்பர் பகுதி சேதமடைந்தது. ட்ராக்டர் ஓட்டுநரை போலீசார் கைது செய்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





