--- --:--:-- --

உறவினரை துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்..!

2

திருப்பூர் மாவட்டத்தில் பெரியப்பாவின் மகனை துண்டு துண்டாக வெட்டி சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிநாசி அடுத்த கரவலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போகவே அவரது மகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் கோவிந்தசாமியின் தம்பி முறையில் உள்ள சித்தப்பா மகன் ரமேஷ் வாக்குவாதத்தின் பொழுது தோட்டத்தில் வைத்து அவனை தள்ளி விட்டதாகவும் இதில் கோவிந்தசாமி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

 

அதை மறைப்பதற்காக கோவிந்தசாமி உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மொட்டைகளில் கட்டி குன்னத்தூர் அருகே உள்ள குளத்தில் வீசியதாக ரமேஷ் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட உடல் பாகங்களை மீட்டுள்ளது. காணாமல் போன மீதமுள்ள பாகங்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon