இரட்டைக் கொலையில் ஐந்தாண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!
இரட்டை கொலை வழக்கில் ஜாமீன் பெற்று 5 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிகார் இளைஞர் சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஓஎம்ஆர் சாலையில் மாயாண்டி அவரது மனைவி வெள்ளி நாயகி கொலை செய்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
மனைவியின் வங்கி பரிவர்த்தனையை கண்காணித்து வந்த சைபர் கிரைம் போலீசாருக்கு மும்பையில் ஏடிஎம்மில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்த பொழுது அவர் ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் மாவு கட்டு போடப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.





