--- --:--:-- --

இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமல்… மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

1

துரையில் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது.

 

இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றவர்கள் அங்கு அசைவ உணவு உண்டதாக படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதனால், நாளை கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மத ரீதியான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பொது அமைதி சீர்குலையக்கூடும் எனவும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. எனினும், திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon