பரந்தூர் கிராம மக்களை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் கிராம மக்களை நேரில் சென்று சந்தித்துப்பேச 19 அல்லது 20 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரி கடிதம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பாதுகாப்பு வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி மற்றும் தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் கொடுத்திருந்த நிலையில் தவெகவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




