--- --:--:-- --

வெகு விமர்சையாக நடந்த நடராஜ பெருமான் திருக்கல்யாணம்..!

6

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்மன், உடனமர் சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சனி மஹா பிரதோசம், திருக்கல்யாணம், மஹோற்சவ விழா அருள்மிகு சிவகாம சுந்தரி நடராஜ பெருமானுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது.

திருக் கல்யாணத்திற்க்கு பக்தர்கள் சீர் வரிசையாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தட்டுகளில் லட்டு, அதிரசம், ஜாங்கிரி, அல்வா, பூந்தி, மிட்டாய் வகைகள், விதவிதமான இனிப்பு வகைகள், தேன்குழல், முறுக்கு, சீடை, பெரிய முறுக்கு, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் ஏராளமான பழ வகைகள், பூஜை பொருட்கள், சுவாமிக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலை, தங்க மாங்கல்யம் ஆகியவற்றை சீர் வரிசையில் கொண்டு வந்தனர். விழாவில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடராஜ பெருமானுக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிசேகம், ஆராதனைகள் நடந்தது. அதே போல் ஆவுடை நாயகி அம்பாளுக்கு மதுரை மீனாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் ஆருத்ரா அன்னதானம் குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நாகராஜ் சுவாமிகள், மற்றும் மூர்த்தி சுவாமிகள் செய்து இருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon