இந்தியாவுடன் அணுஆயுதப் போர் வெடித்தால் ஐ.நா.சபையே பொறுப்பு
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத போர் வெடித்தால் அதற்கு ஐநா சபையே பொறுப்பு என்று பாகிஸ்தான் பிரதமர் இந்திராகாந்தி சேர்க்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் நல்லுறவு பேண முயற்சிகள் மேற்கொண்டதாக கூறினார். ஆனால் இந்திய அதனை புறந்தள்ளி விட்டதாகவும் விமர்சித்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் அங்கு 80 லட்சம் மக்களை இந்தியா சிறை வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய இம்ரான்கான் காஷ்மீரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உலகம் உற்று நோக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாக கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இருந்திருந்தால் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தி இருப்பேன் என்றும் ஆவேசத்துடன் கூறினார். ஐந்தாயிரம் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியதாக இந்தியா கூறுவதாக குறிப்பிட்ட இம்ரான்கான் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இந்தியா தங்கள் மீது தேவையின்றி போடுவதாக குற்றம் சாட்டினார்.
காஷ்மீரில் இருக்கும் தடைகள் விலக்கப்பட்ட பின்னர் அங்கு ரத்த ஆறுகள் தான் ஓடும் என்றும் அவர் கூறினார். ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் என்ற இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையே போர் மூண்டால் அதற்கு ஐநா சபையே பொறுப்பு என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரித்தார். இறுதிவரை போரிட்டால் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X




