பெண்கள் சீரியல் பார்க்காதீங்க : அமைச்சர் செல்லூர் ராஜூ

சீரியல் போன்ற தொலைக்காட்சி தொடர்களை பார்க்காமல் கார்ட்டூன் பார்ப்பது நல்லது. நகைச்சுவை நிகழ்ச்சிகளை பெண்கள் பார்த்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பகுதியில் 200 கர்ப்பிணிகள் பங்கேற்ற வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையுடன் கூடிய சத்துணவு பொருட்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து பேசியவர் வீட்டில் மாமியார் என்ன பேசினாலும் கர்ப்பிணி பெண்கள் அதை கண்டு கொள்ளாமல் நகைச்சுவையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Leave a Reply