--- --:--:-- --

மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை..சிக்கிய ஆசிரியர்..!

8

அரசு பள்ளி ஆசிரியர் மாணவியை கர்ப்பம் ஆக்கியதில் அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஆசிரியர் போக்சோவில் கைதாகி உள்ளார்.

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மாமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியல் ஆசிரியராக உள்ள மலர் செல்வத்திற்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இவர் கடந்த கல்வியாண்டில் பயின்ற 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .

 

அந்த மாணவி இப்பொழுது சென்னை உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு கடந்த 15ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி காரணமாக சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பள்ளியில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

 

விசாரணையில் அந்த மாணவியை பலமுறை தனது ஆய்வுக்கூடத்தில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. வெளியில் சொன்னால் செய்முறை தேர்வு மதிப்பெண்ணை குறைத்து விடுவதாகவும் விரட்டியுள்ளார். செல்வம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரால் வேறு யாரேனும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon