நள்ளிரவில் டயர் வெடித்து பற்றிய தீ..!
தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் டயர் வெடித்து லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூரில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசிக்கு சென்று கொண்டிருந்தது.
லாரி கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற பொழுது திடீரென டயர் வெடித்ததால் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





