--- --:--:-- --

இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர்..!

6

நெல்லையில் இளைஞரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாளையங்கோட்டை வணிகபுரம் பகுதியில் போக்குவரத்து காவலர் சார்லஸ் என்பவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தியுள்ளார்.

 

அவர்கள் நிறுத்தாமல் சார்லஸ் மீது மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. உடனடியாக சார்லஸ் மற்ற காவலர்களுடன் சேர்ந்து அந்த இளைஞர்களை மடக்கி பிடித்து ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கியதுடன் 3500 அபராதம் விதித்துள்ளார்.

 

இந்த நிலையில் சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon