--- --:--:-- --

திருவண்ணாமலையில் பேரதிர்ச்சி..வீடுகள் மீது உருண்டு விழுந்த பாறை..!

6

திருவண்ணாமலையில் மலைப்பகுதியில் பாறை உருண்டு விழுந்ததில் வீட்டில் ஏழு பேர் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மலைப்பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறை வஉசி நகர் 13வது தெருவில் உள்ள வீடுகளின் மீது விழுந்துள்ளது.

 

தகவல் அறிந்த மீட்பு குழுவினரை சேர்ந்த 30 பேர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டுப் பணிகளில் இறங்கியுள்ளனர். முழுமையாக அந்த இடத்தை சுத்தம் செய்த பிறகு சிக்கியிருப்பவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரிய வரும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என ஏழு பேர் வரை சிக்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மண்ணில் புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று இருப்பதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon