புயலின் தாக்கம்..ஒரு நொடியில் தப்பிய விமானம்..!
கடந்த சனிக்கிழமை பெஞ்சல் புயலின் பொழுது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
இந்த நிலையில் 144 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





