உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி புதிய வழக்கறிஞர்களுக்கு அறிவுரை..!
நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்று புதிய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
புதிய வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்வேதா வழக்கறிஞராக பணியாற்றும் பொழுது ரகசியம் காக்க வேண்டும் என்றும் மனுதாரர்களின் ரகசியம் நிழலுக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





