வரும் 24ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபட்டதால் அரசு தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 24ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தரகுறியீடு இதுவரை இல்லாத வகையில் 1600 என்று அளவில் உயர்ந்துள்ளது. காற்றின் தரம் மோசமடைந்துள்ள சூழலில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவை பார்க்கக்கூடிய சூழல் போன்றவற்றால் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சி தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.






