இன்று வெளிநாடு புறப்படுகிறார் மோடி..!
6 நாள் அரசு முறைப்பயணமாக PM மோடி இன்று வெளிநாடு புறப்படுகிறார். நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முதலில் நைஜீரியா செல்லும் அவர், அந்நாட்டு அதிபரை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து விவாதிக்கிறார். பின் அங்கிருந்து புறப்பட்டு 18ம் தேதி பிரேசிலில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். 19ம் தேதி கயானா செல்லும் அவர், டோமினிக் குடியரசின் உயரிய விருதை பெறுகிறார்.






