இன்று இலங்கையில் 17 வது நாடாளுமன்ற தேர்தல்..!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர், காவலர்கள் என 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. திசநாயக வெற்றி பெற்று புதிய அதிபர் ஆனார். இதையடுத்து இலங்கையின் 17ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இலங்கையில் மொத்தம் 225 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பொதுமக்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 13,314 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை காலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 70,000 காவலர்கள் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





