ஆம்புலன்ஸில் தீ விபத்து வெடித்து சிதறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்.. உயிர் தப்பிய பெண்..!
மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் கர்ப்பிணி உயிர் தப்பினார். ஜர்தான் பகுதியில் கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது வாகனத்தில் இருந்து புகை வருவதை கண்டு ஓட்டுனர் அனைவரையும் இறங்க சொன்னார். சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





