--- --:--:-- --

சொந்த ஊருக்கு படை எடுத்த மக்கள்..!

2

தீபாவளி பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படை எடுத்ததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் நேற்று இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

 

இதன் காரணமாக பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு நேரத்திலும் சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

 

சில ஊர்களுக்கு பேருந்துகள் குறைவாக இருந்ததால், இருக்கும் பேருந்துகளில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினார். அதிக அளவிலான மக்கள் கூட்டம் காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டது.

 

Right Menu Icon