--- --:--:-- --

அனைத்து நியாய விலை கடைகளும் அக்டோபர் 27ஆம் தேதி செயல்படும்.!

7

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வரும் 27-ம் தேதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்படுவதாகவும் அன்றைய தினம் வார இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்கு தடை இன்றி கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளும் வருகிற ஞாயிற்றுக்கிழமை 27ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொது விநியோகத்திட்ட பொருட்களை வரும் ஞாயிறு அன்றும் அனைத்து நியாய விலை கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக நவம்பர் 16ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை அன்று பொது விநியோகத் திட்டத்தில் தங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon