போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு..!
போதை ஊசி செலுத்திக்கொண்ட ஏசி மெக்கானிக் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷபி வேலை பார்த்து வந்தார்.
மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முகமது ஷபி கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையான முகமது ஷபி ஊசி மூலம் போதை மருந்துகளை உடலில் ஏற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்த முகமது ஷபியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





