--- --:--:-- --

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

2

வருகிற 22ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை சென்னை அருகே கரையை கடந்தது.

 

இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த சூழலில் மீண்டும் அங்கு கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவக்காற்று காரணமாக அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவதற்கான சூழல் இருப்பதாகவும் இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக வருகிற 22ஆம் தேதி மத்திய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon