--- --:--:-- --

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு 6 படகுகள் 10 மீனவர்கள் வரவழைப்பு..!

4

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தின் பொழுது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆறு படகுகளும் 10 மீனவர்களும் கோவளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

 

கர்நாடகா பாளையம் கிஷ்கிந்தா சாலையில் ஆரியன் மூலம் படகுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டது. கடந்தாண்டு பருவமழையின் பொழுது அடையார் ஆற்றில் அமைந்துள்ள சசி வரதநகர் சமத்துவ பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீரை மீட்டனர்.

 

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்பொழுது படகுகள் மற்றும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் இந்த பகுதியில் உள்ள வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தாம்பரம் ரயில்வே மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon