--- --:--:-- --

அல்ஜீரியா அதிபருடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!

3

ர்த்தக முதலீடு துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து அல்ஜீரியா அதிபருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை நடத்தினார். அல்ஜீரியா உள்ளிட்ட 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

அதன் ஒரு பகுதியாக அல்ஜீரியா சென்றடைந்த முர்மு நாட்டு அதிபரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததுடன் இருதரப்பு விவரங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

 

குடியரசுத் தலைவர் மாளிகை கடையிட்டுள்ள செய்தி குறிப்பில் பிற நாட்டு தலைவர்களும் வர்த்தகம் முதலீடு உள்ளிட்டத் துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon