காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பட்டாசுக்கு தடை விதித்த டெல்லி..!
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி ஒன்றாம் தேதி 2025 வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் மாசு கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 1, 2025 வரை அனைத்து வகையான பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் அவற்றை வெடிப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதில் டெல்லி மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் மற்ற எந்த பகுதிகளை விடவும் டெல்லியில் காற்று மாசு அதிகம் என்பதையும் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





