--- --:--:-- --

இன்று 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

1

மிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கனமழை எதிரொலியாக தமிழகத்தில் இன்று மேலும் இரு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கனமழை எச்சரிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

 

அப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவித்தார். இந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

அது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon