--- --:--:-- --

தீபாவளிக்கு மறுநாளான நவ1-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவிக்க கோரிக்கை..!

21

ந்த சிறப்பு பண்டிகை அன்று மக்கள் பெரியளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஒரு நாள் மட்டும் விடுமுறை என்பதால், அடுத்த நாள் உடனடியாக ஊர் திரும்பும்போது மக்கள் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுவர்.

 

இதனால் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உட்பட பல்வேறு பிரிவினர் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசு விடுமுறை நாட்களாக உள்ளது.

 

எனவே நவம்பர் 1-ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு அறிவித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.எனவே, தீபாவளி பண்டிகையை நல்லமுறையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊரில் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதோடு பண்டிகை முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் செல்ல பஸ் வசதியும் எளிதாக கிடைக்கும்.

 

ஆகவே நவம்பர் 1-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை அன்று வந்ததால், தமிழக அரசு அடுத்த நாளை விடுமுறையாக அறிவித்தது. இதற்கு பதிலாக நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon