சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகரவிளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு சீசனையொட்டி அக்கோயில் நடை, நவ.15ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு சீசன் முதலே தரிசன நேரத்தை 18 மணி நேரமாக அதிகரிப்பதென முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




