--- --:--:-- --

சந்தேகத்திற்கிடமான வாகனம்..சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி..!

8

ராமநாதபுரம் அருகே 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி வட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது.

 

ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திருப்பாலைக்குடி சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

 

சுமார் 60-க்கும் மேற்பட்ட சாக்குப்பையில் பொது விநியோகத்திற்கு ஏற்ப அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய வாகன ஓட்டுநரை தேடுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon