--- --:--:-- --

ஆயுத பூஜை பண்டிகை பூவன் வாழைப்பழ அறுவடை அதிகரிப்பு..!

7

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைப்பழம் அறுவடை அதிகரித்துள்ளது. ஆயுதபூஜை அறுவடை செய்யும் நோக்கில் ஓமலூர் காடையாம்பட்டி தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் பூவன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

 

கடந்தாண்டு போதிய நீர் இன்றி வாழை சாகுபடியும் குறைந்தது. இருந்த போதிலும் சில கிராமங்களில் சாகுபடி செய்திருந்த பூவன் வாழை தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருப்பதால் இரு நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

மேலும் நாளை ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஓமலூர் தாரமங்கலம் சேலம் உழவர் சந்தைக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டு சாகுபடி மற்றும் விளைச்சல் குறைந்துள்ள நிலையில் அதன் தேவை அதிகரித்து விலை சற்று உயர்ந்துள்ளது.

 

கடந்த வாரத்தில் வாழைத்தார் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தற்போது 550 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon