விராட் கோலியை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு..!
பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை சந்தித்துள்ளார். 17 ஆவது பாரா ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற அவருக்கு கோலி வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாரியப்பன் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் 1.85 மீ., உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




