வேலைக்கு சேர்ந்த மறுநாளே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காவலாளி..!
திருப்போருரில் காவலாளி ஒருவர் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் அடுத்த காளவாக்கம் பகுதி ஓஎம்ஆர் சாலையில் புதிய பர்னிச்சர் கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இரவு காவலாளியாக ராமன் என்பவர் பணியில் சேர்ந்தார்.
ஆனால் மறுநாள் காலை வரை கடை திறக்கப்படாததால் கட்டிட உரிமையாளர் சந்தேகமடைந்து மூன்றாவது மாடியில் ஏறி பார்த்த பொழுது மொட்டை மாடியின் கதவு திறந்து கிடந்தது. இரண்டாவது தளத்தில் செக்யூரிட்டி ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காவலாளியுடன் இருந்த அசோக் தலைமறைவாகியுள்ளார்.
திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டது. டைனிங் டேபிள் கட்டையால் ராமர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர் போலீசார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





