--- --:--:-- --

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

2

தேனி சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிகழ்வில் திருப்புமுனையாக அதிமுகவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் 24 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

 

இது தொடர்பாக புகார் அளித்தவர் அதிமுக கவுன்சிலர் மகனான வெங்கடேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது பெட்ரோல் குண்டு வீசிய நான்கு பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

 

அவர்கள் நால்வரும் பிச்சைக்கனியின் ஆதரவாளர்கள் என்றும் வெங்கடேஷ் மீது பழி போடும் விதமாக பெட்ரோல் குண்டை தனது ஆதரவாளர்கள் மூலமே வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon