அமெரிக்காவில் பிரதமர் மோடி… மக்கள் உற்சாக வரவேற்பு
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை இந்திய வம்சாவழியினர் பலரும் சந்தித்திருக்கிறார்கள். நீண்ட நாள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை அவர்கள் மோடியிடம் கொடுத்தனர். அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை ஹூஸ்டன் நகரில் உள்ள சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். சீக்கியர் படுகொலை விவகாரம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகளை பட்டியலிட்டனர்.

அதற்கு தீர்வு காணும்படி கலிபோர்னியாவில் ஆணையராக இருப்பவர் மனு அளித்தார். போரா சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மோடியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். போஸ்டன் நகரில் வசிக்கும் காஷ்மீர் பண்டிதர்கள் மோடியை உற்சாகத்துடன் சந்தித்தனர். அப்போது சமஸ்கிருத பக்தி பாடல்கள் நமஸ்தே சாரதா தேவி என்ற பாடலை பாடியவர்கள் மோடியும் சேர்ந்து பாடினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது அதிலிருந்து காஷ்மீர் பண்டிதர் ஒருவர் மோடி கையில் முத்தமிட்டார். ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று உள்ள பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக வீடியோ பதிவிட்டு குற்றம் சாட்டினர். காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இந்திய மக்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




