பாஸ்கர் இணையதளத்தை தொடங்கி வைத்துள்ள மத்திய அமைச்சர்..!
தொழில் முனைவருக்கான பாஸ்கர் என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் களுக்கு பிரத்தியேக இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பாஸ்கர் எனப்படும் பாரத் ஸ்டாட்டர் நாலேஜ் அக்சஸ் ரெஜிஸ்டிரியை மதிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைத்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், சேவை வழங்குபவர்கள் மற்றும் அரசு அமைப்புகளை ஒருங்கிணைக்கவும் வளர்ச்சிக்கான கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் அதனை எவ்வாறு எதிர்கொண்டு தொழிலை திறம் பட நடத்துவது மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குவது போன்றவை இந்த திட்டத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





