--- --:--:-- --

பேருந்தில் நடத்துனரை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்..!

4

தஞ்சையில் தனியார் பேருந்தில் ஏறிய போதை இளைஞர் நடத்துனரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மது போதையில் மூன்று இளைஞர்கள் ஏறி உள்ளனர்.

 

பெண்கள் அருகில் அமர்ந்தவர்களை நடத்துனர் விகாஸ் வேறு இருக்கையில் அமரும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு இளைஞர் நடத்துனரை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் நடத்துனர் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon