--- --:--:-- --

திருமணம் செய்து கொண்டதை அறிவித்த நடிகர் சித்தார்த்..!

5

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சித்தார்த், அதிதி ஆகிய இருவரும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் தலைகாட்ட தொடங்கினர்.

 

மேலும் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டதை வெளிப்படையாக தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 28 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தனர்.

 

அதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon