மோசடிக்கு உடந்தையாக இருந்த ஈ சேவை மைய உரிமையாளர்..!
திண்டுக்கல் மாநகராட்சியில் பணம் கையாடலுக்கு ஆவணம் தயாரித்துக் கொடுத்த இ சேவை மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடியே 66 லட்சம் ரூபாயை கையாடல் விவகாரத்தில் இளநிலை உதவியாளர் சரவணன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
அங்கு ஜூன் மாதம் முதல் மக்களின் வரிப்பணத்தை வங்கியில் சிலர் மோசடி செய்துள்ளார். இந்த விவகாரத்தில் கண்காணிப்பாளர் சாந்தி, இடைநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம்ஸ் சகாயராஜ் ஆகியோரை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.
புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே வங்கியில் பணம் செலுத்தியது போல் ஆவணம் தயாரித்து கொடுத்த ஈ சேவை உரிமையாளர் ரமேஷ் ராஜா கைது செய்யப்பட்டார்.





