பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது..!
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகளில் போல் என்சிசி முகம் நடத்தி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த குழுவின் முக்கிய குற்றவாளியான சிவராமனின் நெருங்கிய நண்பரான டானியலை கைது செய்துள்ளனர். ஜிம் மாஸ்டராகவும் மத போதகராகவும் இருந்து வந்த டேனியல் அருள்ராஜ் சிவராமனின் குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை இந்த வழக்கில் தனியார் பள்ளியின் பெண் முதல்வர் மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.





