ஓடும் பேருந்தின் சக்கரம் கழன்றதால் பரபரப்பு..!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தனியார் சொகுசு பேருந்தின் சக்கரம் கழன்ற நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது.
பேருந்து முன் பக்கம் சக்கரம் கழன்றதை அடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்து சாலையோரத்தில் நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் முன் சக்கரத்தை கழற்றி தயார் நிலையில் வைத்திருந்த சக்கரத்தை இயக்கி சென்றார்.





